Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூஸீலாந்து 365 ஆல் அவுட்

Webdunia
சனி, 13 டிசம்பர் 2008 (16:15 IST)
டுனெடின்: நியூஸீலாந்து அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் டுனெடின் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் நியூஸீலாந்து அணி 365 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மழை காரணமாக 2-ம் நாள் ஆட்டம் நேற்று முழுதும் கைவிடப்பட்டதால் இன்று 3-ம் நாள் காலை 226/4 என்று களமிறங்கிய நியூஸீலாந்து அணியில் ரைடர் சிறப்பாக விளையாடி 89 ரன்களை எடுத்தார்.

மெக்குல்லம் 25 ரன்களுக்கு முதலில் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக ஜேம்ஸ் ஃபிரான்க்ளின் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வெட்டோரி 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நியூஸீலாந்து 365 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேற்கிந்திய அணியில் டேரன் போவெல், பிடல் எட்வர்ட்ஸ், கிறிஸ் கெய்ல் ஆகியோர் முறையே 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

3- ம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய அணி விக்கெட் இழப்பின்றி 39 ரன்கள் எடுத்துள்ளது. கிறிஸ் கெய்ல் 48 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 29 ரன்களுடனும் சாட்டர்கூன் 9 ரன்களூடனும் களத்தில் உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

Show comments