Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் கணவர் மறுமணம்.. சானியா மிர்ஸாவின் சோகமான பதிவு..!

Mahendran
சனி, 20 ஜனவரி 2024 (12:44 IST)
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் மறுமணம் செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து சானியா மிர்சா தனது சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் செய்துள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக். இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "திருமணம் என்பது கடினமானது. விவாகரத்தும் கடினமானது. இதில் உங்களுக்கான கடினமானதை தேர்வு செய்யுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு சோயிப் மாலிக்குடன் இவரது திருமணம் முடிவுக்கு வந்ததை உறுதி செய்தது.

இந்த நிலையில்  சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் சனா ஜாவத் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் சானியா மிர்சா புதுமண தம்பதிகளுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

அடுத்த கட்டுரையில்
Show comments