Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராடும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் – ஐந்தாம் நாள் திக் திக் நிமிடங்கள்

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (09:29 IST)
ஆஸ்திரேலியாவுக்கு முதல் டெஸ்ட்டின் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 3 விக்கெட்களை எடுக்கப் போராடி வருகிறது

இந்தியா அஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இந்தியா புஜாராவின் சிறப்பான ஆட்டத்தால் கௌரவமான ஸ்கோரை எட்டியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 250 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்களும் ஸ்டார்க், கம்மின்ஸ், லியான் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

அடுத்து நேற்றுக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும் இந்தியப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் மட்டும் நிலைத்து நின்று ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டார். மற்ற வீரர்கள் அனைவரும் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தங்கள் விக்கெட்களை இழந்து வெளியேறினர். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த அணி சார்பில் டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 72 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் பூம்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்களும், இஷாந்த் ஷர்மா மற்றும் ஷமி 2 விக்கெட்களும்  வீழ்த்தி அசத்தினர்.

இதையடுத்து இந்தியா 15 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்திய அணி தனது 2 வது இன்னிங்ஸைத் தொடங்கி ஆடியது. இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் 18 ரன்களோடும் லோகேஷ் ராகுல் 44 ரன்களோடும் நடையைக் கட்ட அடுத்து வந்த புஜாராவும் கோஹ்லியும் பொறுப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். நிதானமாக விளையாடிய கோஹ்லி 34 ரன்கள் நாதன் லியன் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா. தொடர்ந்து சிற்ப்பாக விளையாடிய புஜாரா 71 ரன்களும் ரஹானே 70 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து 323 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வருகிறது. கடைசி நாளான இன்று ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்துள்ளது. பேட்ஸ்மேன்கள் அவுட ஆகி வெளியேறி விட்டாலும் பவுலர்கள் நிதானமாக நின்று ரன் குவித்து வருகின்றனர். இவர்கள் விக்கெட்டைக் கைப்பற்ற முடியாமல் இந்திய அணி போராடி வருகிறது. இந்தியா வெற்றிக்கு இன்னும் 2 விக்கெட்களும் ஆஸ்திரேலியா வெற்றிக்கு இன்னும் 95 ரன்களும் தேவைப்படுகிற்து. இன்னும் 45 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் இரண்டு அணிகளில் யாராவது ஒருவர் வெற்றி பெறுவது உறுதி என்ற நிலை உருவாகியுள்ளது.  இந்தியா சார்பில் முகமது ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் அதிகபட்சமாக 60 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments