Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (21:34 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் 33 ரன்கள் பின்தங்கி இருந்த இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சிலும் சொதப்பியதால் 81 ஓரங்களில் ஆட்டமிழந்தது. இதனை அடுத்து 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 30 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது 
 
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை எடுத்த அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments