இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பெங்களூரில் நடைபெற்றது., இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்தது. ஸ்மித் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்
இதனை அடுத்து 287 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 289 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்த போட்டியை வென்றது மட்டுமின்றி தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
ஸ்கோர் விபரம்:
ஆஸ்திரேலியா: 286/9 50 ஓவர்கள்
ஸ்மித்: 131
லாபிசாஞ்சே: 54
ரோஹித் சர்மா: 119
விராத் கோஹ்லி: 89