Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கத்துக்கு கூடுதல் ரயில்கள் – தோனியா ? கோஹ்லியா ?

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2019 (15:57 IST)
நாளை சென்னையில் முதல் ஐபிஎல் போட்டி தொடங்க இருப்பதால் சென்னை சேப்பாக்கத்துக்கு கூடுதல் ரயில்கள் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு எப்ரல் முதல் மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்க இருப்பதால் பாதுகாப்புக் காரணங்களால் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் பிரச்சனைகள் ஏற்பட்டன. அதனால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்பிரிக்கா அல்லது துபாயில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே இதுபோல 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகள் பாராளுமன்றத் தேர்தலின் போது வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன.ஆனால் பிசிசிஐ இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என அறிவித்து இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அதையடுத்து 12 ஆவது ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 23 (நாளை ) ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கின்றன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இதற்கான டிக்கெட் விற்பனை இப்போது நடந்து முடிந்துள்ளது. இதை அடுத்து பார்வையாளர்கள் வருகையை அடுத்த் சேப்பாக்கம் வழியாக செல்லும் மின்சார ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாளை நடக்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத இருப்பதால் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments