Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா மற்றும் தமிழ்நாட்டுக்கு பவானி தேவி புகழ் தேடித்தர வேண்டும்- தினகரன்

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (19:09 IST)
ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல்   பதக்கத்தை உறுதி செய்துள்ள வீராங்கனை பவானி தேவிக்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வாழ்த்துகள் கூறியுள்ளார்.

சீனாவின் வுக்ஸியில் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில்,  இந்தியா சார்பில் பெண்களுக்கான சாப்ரே பிரிவின் 64 வது சுற்றில் பவானி தேவி பை பெற்றார்.

இதையடுத்து, அடுத்த சுற்றில் கஜகஸ்தானின் டோஸ்பே கரினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தையை சுற்றில்  பவானி 15-11 என்ற புள்ளிகள் கணக்கில் முன்றாம் நிலை வீராங்கனை ஓசானி செரியை வீழ்த்தினார்.

இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், 15-10 என்ற கணக்கில்  உலக சாம்பியனான  ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எமுராவை வீழ்த்தி பவானி தேவி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல்   பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில்,  வீராங்கனை பவானி தேவிக்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வாழ்த்துகள் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் வாள் வீச்சுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி வெண்கல பதக்கம் வென்று சாதனை புரிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டின் பெருமையை நிலை நாட்டும் வகையில் பதக்கம் வென்ற பவானி தேவிக்கும், அவருக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்துவரும் பெற்றோர், பயிற்சியாளர் ஆகியோருக்கும் வாழ்த்துகள் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கின்றேன்.

வரும் காலங்களில் மேலும் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இந்தியா மற்றும் தமிழ்நாட்டுக்கு புகழ் தேடித்தர வேண்டும் என பவானி தேவி அவர்களை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகின்றேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments