உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க சிஎஸ்கே ஜெர்ஸி அணிந்து வாருங்கள்: ஆஸ்திரேலிய கேப்டன்

Mahendran
சனி, 27 செப்டம்பர் 2025 (15:33 IST)
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலீசா ஹீலி, சிஎஸ்கே அணியின் மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து வரவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
 
மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பை வரும் செப்டம்பர் 30 முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தோனிக்கும், சிஎஸ்கே அணிக்கும் இருக்கும் மிகப்பெரிய ஆதரவை ஹீலி தனது பேச்சில் குறிப்பிட்டார். 
 
"மஞ்சள் நிறத்தில், குறிப்பாக தோனியின் சிஎஸ்கே ஜெர்சியை இந்திய ரசிகர்கள் அணிந்து வந்தால் எனக்கு மிகவும் பிடிக்கும். அது கூட்டத்திற்கு ஒரு கூடுதல் அழகை கொடுக்கும்," என்று அவர் கூறினார். மேலும், தங்கள் அணியை ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான அணியாக நினைப்பதற்கு நன்றி தெரிவித்தார்.
 
இந்தியாவில் விளையாடுவது குறித்துப் பேசிய ஹீலி, இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமானது என்றும், இங்கு ரசிகர்கள் தரும் ஆதரவு உற்சாகமளிப்பதாகவும் தெரிவித்தார் 
 
ஆஸ்திரேலிய அணி தங்கள் முதல் போட்டியில் அக்டோபர் 1-ஆம் தேதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
 
 Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments