Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவுக்கு 331 ரன்கள் இலக்கு கொடுத்த வங்கதேசம்:

Webdunia
ஞாயிறு, 2 ஜூன் 2019 (19:38 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆசிய அணிகளான பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் படுதோல்வி அடைந்த நிலையில் இன்னொரு ஆசிய அணியான வங்கதேசம் இன்று தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை புரட்டி எடுத்து 50 ஓவர்களில் 330 ரன்கள் குவித்துள்ளது. 
 
வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் 75 ரன்களும், ரஹிம் 78 ரன்களும், மஹ்முதுல்லா 46 ரன்களும், சர்கார் 42 ரன்களும் எடுத்துள்ளனர், தென்னாப்பிரிக்கா தரப்பில் ஃபெலுக்வாயோ, மோரிஸ் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்
 
இந்த நிலையில் 331 என்ற இமாலய இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா தற்போது விளையாடி வருகிறது. அந்த அணி சற்றுமுன் வரை 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தென்னாபிரிக்கா அணி ஏற்கனவே முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்துள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய நிலை உள்ளது. அதேபோல் வங்கதேச் அணியும் இன்றைய முதல் போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இடம்பிடிக்க மிகுந்த ஆர்வத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
நாளை இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன,. இந்த போட்டி நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெறவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments