மக்களுக்கு ஒன்னும் செய்யல.. ஆனா தலைவர் ஆகணுமா?!.. விஜயை சீண்டும் சாலமன் பாப்பையா!...

BALA
வியாழன், 27 நவம்பர் 2025 (17:17 IST)
நடிகர் விஜய்க்கு டீன் ஏஜிலேயே எப்படி நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்ததோ, அதேபோல தனக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக கூடியதுமே அரசியலுக்கு போக வேண்டும் என்கிற எண்ணமும் வந்தது. அதை தொடர்ந்து அவரின் ரசிகர் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. கடந்த பல வருடங்களாகவே விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அரசியலுக்கு வருவது பற்றி தொடர்ந்து ஆலோசித்து வந்தார். ஒரு கட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலுக்கும் வந்துவிட்டார்.

‘சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே மக்களுக்காக சேவை செய்ய அரசியலுக்கு வந்திருக்கிறேன். பணம் சம்பாதிப்பது என் நோக்கம் அல்ல’ என்றும் சொன்னார். அதோடு பேசும் மேடைகளில் எல்லாம் திமுகவை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தும் வருகிறார் விஜய்.

அதேநேரம் திமுகவை அவர் வீழ்த்த வேண்டுமெனில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது நல்லது என அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள். துணை முதல்வர் பதவி கொடுக்கிறோம் என சொல்லியும் விஜய் அதிமுக பக்கம் செல்லவில்லை என்கிறார்கள். மேலும், இரண்டரை வருடம் நான் முதல்வராக இருப்பேன் என அவர் பழனிச்சாமியிடம் கேட்டதாகவும், அதற்கு பழனிச்சாமி சம்மதிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேராசிரியர் சாலமன் பாப்பையா ‘தலைவன்னா மக்களுக்காக தெருவுல இறங்கி போராடணும். ஆனா தெருவுக்கு வரல.. மக்களுக்காக எந்த தொண்டும் செய்யல.. காலணா காசு கூட கிள்ளி போடல.. நான் யாரை சொல்றேன்னு உங்களுக்கு விளங்கும். காமராஜர் படிக்கிற காலத்தில் படிப்பை விட்டுட்டு சாப்பிடாம இருந்த நாட்கள் எத்தனையோ.. தூங்காம இருந்த நாட்கள் எத்தனையோ.. தெரு ஓரமா இருக்க மக்களுக்கு அவர் பாடுபட்டது எத்தனை!.. அவ்வளவு உழைச்ச மனுசனையே ஒரு காலத்தில் தூக்கி எறிஞ்சிட்டாங்க.. அப்படிப்பட்ட நாட்டுக்குள்ள இருந்துட்டு திடீர்னு ஒரு வேலையும் செய்யாம.. ஒண்ணுமே செய்யாம வந்து நின்னுட்டு நட்ட நடு தலைவரா ஆகணும்னு மட்டும் ஆசை’ என பேசி இருக்கிறார்.<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

பாமக தலைவராக அன்புமணி தொடர முடியாது.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments