Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் vs ஈபிஸ்; எதிர்க்கட்சி தலைவர் யார்... இன்று கூடுகிறதா அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டம்?

Webdunia
திங்கள், 10 மே 2021 (08:10 IST)
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து முடிவெடுக்க இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்வதில் அதிமுகவில் கருத்து மோதல்கள் எழுந்துள்ளன. சில தினங்களுக்கு முன்னர் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஸ் தரப்பு மாறி மாறி தேர்தல் தோல்விக்கு குற்றம்சாட்டிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதற்கான அனுமதியை இன்னும் அதிமுக வாங்கவில்லை. அதனால் கூட்டம் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதிமுகவில் ஈபிஎஸ் ஆதரவு எம் எல் ஏக்களே அதிகமாக உள்ளதால் அவருக்கு கிடைக்கவே வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஓபிஎஸ் விடாப்பிடியாக இருப்பதால் வாக்குப்பெட்டி அமைத்து எம் எல் ஏக்களை வாக்களிக்க செய்துகூட முடிவு எட்டப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments