Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கூட்டணிக்கு அரசியல் கட்சிகள் வரத்தயங்குவது ஏன்? வல்லுனர்கள் கருத்து..!

Siva
திங்கள், 5 பிப்ரவரி 2024 (08:10 IST)
ஒரு பக்கம் திமுக தனது கூட்டணி கட்சிகளிடம் விறுவிறுப்பாக தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக பக்கம் இன்னும் ஒரு கட்சி கூட கூட்டணிக்காக வரவில்லை.  அதிமுகவும், கூட்டணிக்காக தனது கதவை திறந்து வைத்திருக்கும் நிலையில் எந்த அரசியல் கட்சியும் அந்த கட்சியுடன் கூட்டணி வர தயங்கி வருவதாக கூறப்படுகிறது

இது குறித்து அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்த போது ஒன்றிணைந்த அதிமுகவாக இருந்தபோது அந்த கூட்டணியில் இணைந்தால் வெற்றிக்கு அதிக வாய்ப்பு இருந்ததால் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வந்ததாகவும் தற்போது அதிமுக நான்காக உடைந்து இருப்பதால் அந்த கூட்டணியில் இணைந்தால் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றே பல கட்சிகள் கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்

அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருப்பதாக கூறப்பட்டாலும் டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் பெரிய அளவில் வாக்குகளை பிரிப்பார்கள் என்றும் இதனால் அதிமுக வாக்குகள் சிதறி போக வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

மேலும் பாஜகவிடமிருந்தும் அதிமுக தற்போது பிரிந்து விட்டதால் அதிமுகவின் வாக்குகள் பெறும் அளவு சரிந்து இருக்கலாம் என்றும் அதனால் தான் கூட்டணி கட்சிகள் வர தயங்குவதாகவும் கூறப்படுகிறது.

எனவே அதிமுக தனது கூட்டணியில் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ,பாஜக ஆகியவற்றை சேர்த்துக்கொண்டால் மட்டுமே அரசியல் கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments