வாணியம்பாடி பள்ளி காவலாளி ஓட ஓட குத்தி கொலை.. விடுமுறை அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 7 ஏப்ரல் 2025 (10:57 IST)
வாணியம்பாடி பள்ளி காவலாளியாக இருந்தவர், ஓட ஓட மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இக்பார் சாலையில் உள்ள தனியார் பள்ளியின் காவலாளியாக இர்பான் என்பவர் பணியாற்றி வந்தார்.
 
இன்று காலை வழக்கம் போல அவர் பள்ளிக்கு தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து, திடீரென வழிமறித்து கத்தியால் குத்தினர்.
 
இதனை அடுத்து, அவர் உயிர் தப்பிக்க ஓடிய நிலையில், ஓட ஓட விரட்டிய மர்ம நபர்கள் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதனால் இர்பான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, இர்பான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?

ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments