Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சி அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்த்!

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (14:31 IST)
இன்று காலை கட்சி அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்த் 118 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.


விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நாளை காலை எட்டு முப்பது மணிக்கு எனது கரங்களால் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தேமுதிக கழக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், மகளிரணி, தொழிற்சங்கம் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நமது நாட்டுப் பற்றை பறைசாற்றும் வகையில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டுமென்றும் விஜயகாந்த் தெரிவித்தார்.

அதன்படி, சொன்னதுபோலவே இன்று காலை கட்சி அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்த் 118 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினார். உடன் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலார்கள், மகளிர் அணியினர், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

உடல்நலக் குறைவு காரணமாக கட்சி நிகழ்ச்சிகளில் கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் பங்கேற்காமல்  இருந்த நிலையில் பொதுவெளியில் அவர் வந்தது தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments