விஜய் தலைமையில் மெகா கூட்டணி? தனித்துவிடப்படும் அதிமுக - பாஜக கூட்டணி?

Siva
செவ்வாய், 17 ஜூன் 2025 (15:06 IST)
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் வேறு எந்த கட்சியும் இணையாது என்றும், அந்த கூட்டணி தனித்து விடப்படும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், விஜய் தலைமையில் சில கட்சிகள் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
விஜய் தலைமையிலான கூட்டணியில் சேர பாமக மற்றும் தேமுதிக தயாராக இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
மேலும், தி.மு.க. கூட்டணியில் அதிக தொகுதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட்டணியில் இருந்து வெளியேறும். ஆனால், அந்தக் கட்சிகள் பா.ஜ.க. இருக்கும் அதிமுக கூட்டணியில் சேராது என்பதால், விஜய் கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
மதிமுகவும் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர தயங்காது என்றும், எனவே விஜய் தலைமையிலான கூட்டணியில் பாமக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் மற்றும் மதிமுக இணைந்தால், கண்டிப்பாக அந்தக் கூட்டணி வெற்றி கூட்டணியாக மாறும் என்றும் அரசியல் விமர்சகர்கள் யூடியூப் தளங்களில் பேட்டி அளித்து வருகின்றனர். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments