1+1=0.. விஜய்யும் சீமானும் சேர்ந்தால் ஜீரோ தான்: பத்திரிகையாளர் மணி

Siva
புதன், 11 ஜூன் 2025 (20:10 IST)
"விஜய்யும் சீமானும் ஒருபோதும் கூட்டணி சேர மாட்டார்கள் என்றும், அப்படி கூட்டணி சேர்ந்தால் கண்டிப்பாக ஜெயிக்க முடியாது என்றும்," பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
 
பத்திரிகையாளர் மணி இன்று அளித்த பேட்டி ஒன்றில், "திமுக கதி கலங்குவது விஜய்யை பார்த்து மட்டுமே என்றும், பிரசாந்த் கிஷோர் அவருக்கு 15 முதல் 20 சதவீதம் வாக்குகள் இருக்கிறது என்று சொன்னதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்றும், குறைந்தபட்சம் அவரிடம் 15 சதவீதம் இருக்கிறது என்பது உண்மைதான் என்றும்," அவர் தெரிவித்தார்.
 
ஆனால், அதே நேரத்தில், "கூட்டணி இல்லாமல் விஜய்யால் ஜெயிக்க முடியுமா என்றால், அது பெரிய கேள்விக்குறிதான் என்றும், அதிமுக-பாஜக கூட்டணிதான் அவருக்கு ஒரே வாய்ப்பு என்றும்," அவர் தெரிவித்தார்.
 
"சீமானுடன் விஜய் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என்றும், பெரியாரை எதிரி என்று கூறும் சீமானும், பெரியாரைக் கொள்கைத் தலைவர் என்று கூறும் விஜய்யும் சேர்ந்தால் 1+1=0 தான் முடிவு வரும் என்றும்," அவர் கூறினார்.
 
"அதிகபட்சமாக அவர் அதிமுக-பாஜக கூட்டணியில் இணையத்தான் வாய்ப்பு இருக்கிறது என்றும்," பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments