Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயகாந்த் சகோதரி உடல் நலக்குறைவால் காலமானார்.. தேமுதிக இரங்கல்..!

Advertiesment
விஜயகாந்த்

Mahendran

, செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (18:04 IST)
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் மூத்த சகோதரி விஜயலட்சுமி துரைராஜ் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். இந்த துயர செய்தி தேமுதிகவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 'புரட்சி கலைஞர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த சகோதரி டாக்டர் திருமதி விஜயலட்சுமி துரைராஜ் அவர்கள் உடல் நல குறைவால் இயற்கை எய்தினார். அவருடைய இறுதி சடங்கு மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நாளை நடைபெற உள்ளது. அவரின் இழப்பு கேப்டன் குடும்பத்திற்கு பெரும் இழப்பாகும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது
 
விஜயகாந்தின் சகோதரி மறைவுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

29 வார கர்ப்பத்தை தெரியாமல் இருந்த பெண்.. கால்பந்து மைதானத்தில் திடீரென குழந்தை பெற்றதால் பரபரப்பு..!