கோவை விமான நிலையத்தை சேதப்படுத்திய த.வெ.க தொண்டர்கள்! - போலீஸார் வழக்குப்பதிவு!

Prasanth Karthick
ஞாயிறு, 27 ஏப்ரல் 2025 (10:12 IST)

நேற்று கோவை சென்ற தவெக தலைவர் விஜய்யை காண தொண்டர்கள் குவிந்த நிலையில் அவர்கள் மீது காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தமிழக சட்டமன்ற தேர்தலை குறி வைத்து தமிழக வெற்றிக் கழகம் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் நேற்று கோவையில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுவதற்காக விஜய் நேற்று விமானம் மூலமாக கோவை சென்றடைந்தார்.

 

அவரை காண விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்ததால் பரபரப்பு எழுந்தது. இதனால் போக்குவரத்தும் பெரிதாக பாதிக்கப்பட்டது. விஜய்யை காண்பதற்காக விமான நிலையத்தில் குவிந்த தொண்டர்கள் முண்டியடித்து சென்றதில் விமான நிலைய ட்ராலிகள், தடுப்பு அமைப்புகளை சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக தவெக தொண்டர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கதம் கதம்!.. வேற கேளுங்க!.. செங்கோட்டையன் பற்றி கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி ரியாக்‌ஷன்!...

தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.1440 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

ஒரே ஒரு மெயில் ஹேக் செய்து ரூ.2.16 கோடி மோசடி.. காவல்துறையின் துரித நடவடிக்கை..!

இடிக்கப்படுகிறது டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்.. என்ன காரணம்?

கஞ்சா போதை.. பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்த மகன்.. தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments