த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

Siva
ஞாயிறு, 7 டிசம்பர் 2025 (12:21 IST)
வரவிருக்கும் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் அமமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்தார். கூட்டணி குறித்து அமமுக இன்னும் எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். இருப்பினும், கூட்டணியை தலைமையேற்று நடத்துகிற சில கட்சிகள் தங்கள் கட்சியை அணுகி பேசி வருவதாகவும், முடிவெடுக்க இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இந்தத் தேர்தலில் நான்கு முனை போட்டிதான் இருக்கும் என்று கணித்த தினகரன், தற்போது அமமுகவை கூட்டணிக்கு அணுகி வருவது குறித்து மறைமுகமாக பேசினார். மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓர் அணியில் இணைய வேண்டும் என்று உணர்ந்து வருவதாக நம்பிக்கை தெரிவித்தார்.
 
அவர் குறிப்பிட்டுள்ள உறுதியான கூட்டணிகளில், ஆளும் தி.மு.க. கூட்டணி, என்.டி.ஏ. கூட்டணி, தனித்துப் போட்டியிடும் சீமான் மற்றும் விஜய் தலைமையிலான ஒரு வலுவான கூட்டணி அமையும் என்ற செய்திகள் வருவதாக சுட்டிக்காட்டினார். இதன் மூலம், த.வெ.க. தலைமையில் ஒரு வலுவான அணி உருவாகி வருவதை அவர் உறுதிப்படுத்தினாலும், அதில் அமமுக சேருவது குறித்து தற்போது எந்த உறுதிப்பாட்டையும் டிடிவி தினகரன் அளிக்கவில்லை.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments