நெல்லை - திருச்செந்தூர் - நெல்லை ரயில் 25 நாட்களுக்கு ரத்து.. என்ன காரணம்?

Mahendran
வெள்ளி, 14 மார்ச் 2025 (19:06 IST)
ரயில் பாதை மேம்படுத்தும் பணிகள் காரணமாக, நெல்லை - திருச்செந்தூர் - நெல்லை இடையே இயங்கும் பயணிகள் ரயில் சேவை 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
 
இந்த குறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லையிலிருந்து மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், திருச்செந்தூரிலிருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் ரயிலும் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13 வரை இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இரண்டாவது யார்டில் பிட்லைன் தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவதால், இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அதேபோல் மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 08.20 மணிக்கு புறப்பட வேண்டிய மேட்டுப்பாளையம் - போத்தனூர் மெமு ரயிலும், போத்தனூரில் இருந்து காலை 09.40 மணிக்கு புறப்படும் போத்தனூர் - மேட்டுப்பாளையம் மெமு ரயிலும் மார்ச் 16 அன்று முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன.
 
 Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments