Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TNPSC Group - I & II போட்டித்தேர்வுகளுக்கு இணையவழி

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (21:44 IST)
(Zoom Meeting Class) இலவச பயிற்சி வகுப்பு
 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறவுள்ள TNPSC Group – I & II ஒருங்கிணைந்த முதல்நிலை மற்றும் முதன்மை போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்தி வரும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கரூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் இணையவழி ( Zoom Meeting Class ) இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு தற்போது நடைபெற்று வருகிறது.


பயிற்சியின் சிறப்பு அம்சங்கள்

1. ஒருங்கிணைந்த முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளுக்கான பாட வகுப்புகள்.

2. தற்போது மாறிவரும் குரூப் - 1 தேர்வுகளின் பாடத்திட்டத்தின்படி நடப்பு நிகழ்வுகளோடு பொருத்தியும் மரபு ரீதியான தலைப்புகளை ஒட்டியும் பாடமுறை அமையும். 

3. தேர்விற்குத் தேவையான பாடங்கள் மற்றும் பகுதிகளைக் கண்டறிய வைக்கும் திறனை மேம்படுத்துதல்.

4. தேர்வுகளுக்கு ஏற்ப சமீபகால நிகழ்வுகளை ( Current Affairs ) கண்டறிந்து படித்தல்.

5. அனைத்து பாட வகுப்புகளும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கப்படும்.

மேற்காணும்  TNPSC Group – I & II ஒருங்கிணைந்த முதல்நிலை மற்றும் முதன்மை போட்டித்தேர்வுகளுக்கு இணையவழி ( Zoom Meeting Class ) இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை வாரநாட்களில் காலை 10.00 மணி மற்றும் மாலை 5.00 மணி என இருவேளைகளில் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவியர்கள் கீழ்காணும் ஒருங்கிணைப்பாளர் கைபேசி எண்ணை தொடர்புகொண்டு பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு
.சல்மான் ஹைதர் பெய்க்
ஒருங்கிணைப்பாளர்,
கைபேசி - 8610491161

இப்படிக்கு,
செ.செ.சிவக்குமார்
நூலகர், மாவட்ட மைய நூலகம்,
கரூர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments