Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதிகளை வைத்து பெட்ரோல் பங்க் வேலை – தமிழக அரசு புதிய முயற்சி !

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (15:03 IST)
தமிழகத்தில் 3 இடங்களில் சிறைக்கைதிகளை வைத்து இயங்கும் புதியப் பெட்ரோல் பங்குகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

கோவை, வேலூர், பாளையங்கோட்டை, புழல் மற்றும் புதுக்கோட்டை சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஆகிய இடங்களில் உள்ள சிறைக்கைதிகளைக் கொண்டு புதிதாக பெட்ரோல் விற்பனை நிலையங்களை உருவாக்கும் பணிகளை தமிழக அரசு இன்று தொடங்கியுள்ளது. இந்த புதிய முயற்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் தமிழக அரசோடு கூட்டு சேர்ந்துள்ளது.

வேலூர், கோவை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த பெட்ரோல் பங்குகளை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி கானொலி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறைக் கைதிகள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்த பெட்ரோல் வங்கிகளில் சிறைக் கைதிகள் மற்றும் சிறைத் துறை ஊழியர்களும் இணைந்து பணியாற்ற இருக்கின்றனர். கோவையில் உள்ள பெட்ரோல் வங்கியில் கோவை சிறையில் உள்ள 2000 கைதிகளில் 23 பேர் மட்டுமே நன்னடத்தை அடிப்படையில் இங்கு பணியாற்ற இருக்கின்றனர். மேலும் இந்த பெட்ரோல் நிலையங்களில் சிறைக்குள் சிறைக் கைதிகள் தயாரிக்கும் பொருட்களும் விற்பனைக்கு வைக்க இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments