தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
முன்னதாக அரப்பிக்கடலில் உருவான புயலில் காரணமாக மே 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், கடலோர மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இப்போது வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன.