அரசு பள்ளியில் பணிபுரிந்த தையல் ஆசிரியை திடீரென தற்கொலை செய்து கொண்டதை அடுத்து சக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் என்ற பகுதியில் அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியை நாகேஸ்வரி என்பவர் பணி செய்து வந்தார். அவரை தலைமை ஆசிரியரும் பணியாற்ற அனுமதிக்காமல் பல மணி நேரம் காக்க வைத்து வைத்து திருப்பி அனுப்பி உள்ளதாக தெரிகிறது
மேலும் பல்வேறு வகையில் டார்ச்சர் செய்ததால் மன உளைச்சல் அடைந்த தையலாசிரியர் நாகேஸ்வரி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து சக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பள்ளிக்கு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்
இதனை அடுத்து தலைமை ஆசிரியையை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்த பின்னரே உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகிறது