Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு தொகுதியா? 2 தொகுதியா? என்பதை தலைமை முடிவு செய்யும்: அமித்ஷாவுக்கு அதிமுக பதிலடி..!

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2023 (15:44 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைத்திருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னையில் கூறிய நிலையில் கட்சிகளின் செல்வாக்கை பொறுத்து ஒரு தொகுதியா? 2 தொகுதியா? என்பதை தலைமை முடிவு செய்யும் என அதிமுக பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக அதிக தொகுதிகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் குறைந்த பட்சம் 25 தொகுதிகளில் போட்டியிட பாஜக திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. புதுவையை சேர்த்து 40 தொகுதிகள் மட்டுமே இருக்கும் நிலையில் பாஜகவுக்கு மட்டும் 25 தொகுதிகளை அதிமுக விட்டுக் கொடுக்குமா அல்லது பாஜகவின் மிரட்டலுக்கு அடிவையும் அடிபணியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
இந்த நிலையில் அதிமுகவின் அமைப்புச் செயலாளர் செம்மலை இது குறித்து கூறிய போது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்றும் அதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் கட்சிகளின் செல்வாக்கை பொறுத்து ஒரு தொகுதியா? அல்லது 2 தொகுதியா? என்பதை தலைமை முடிவு செய்யும்  என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments