அதிமுக ஆட்சி அமைக்க இளைஞர்கள் அணில் போல உதவ வேண்டும்" - செல்லூர் ராஜூ

Siva
திங்கள், 22 செப்டம்பர் 2025 (10:38 IST)
மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “ராமன் பாலம் கட்ட அணில் உதவியது போல, அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய இளைஞர்கள் உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இன்று மதுரையில் கட்சியின் இளைஞரணி மற்றும் தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் செல்லூர் ராஜூ பேசியபோது, ‘அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வரும். எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து, உண்மைகளை எடுத்துரைக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
 
செல்லூர் ராஜுவின் இந்த உவமை, சமூக வலைதளங்களில் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரது பேச்சை ஆதரித்து பேசியுள்ள நிலையில், வேறு சிலர் இந்த உவமை பொருத்தமற்றது என்று விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், இந்த பேச்சு கட்சித் தொண்டர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments