Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவிப்பு..

Webdunia
சனி, 9 டிசம்பர் 2023 (07:31 IST)
கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து  இங்கு உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் 11ஆம் தேதி தான் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தனியார் பள்ளிகளும் திறக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இந்த நான்கு மாவட்டங்களை தாண்டி இரண்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.  

மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை என்றும் அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்றும் இரு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை என்றும் அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்றும் இரு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை இலங்கைக்கு மாறியது ஏன்? இதுதான் காரணம்..!

கடலூர் அருகே கடலில் சிக்கிய மீனவர்கள் பத்திரமாக மீட்பு! களத்தில் இறங்கிய ஹெலிகாப்டர்..!

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. சில தேர்வுகளும் ரத்து..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் தொடர்ந்து குறைவு: எப்போது கரையை கடக்கும்?

இன்று காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments