கட்சி உறுப்பினர்களை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை! நான்தான் தலைவர்! - அன்புமணி அதிரடி!

Prasanth Karthick
வெள்ளி, 30 மே 2025 (14:34 IST)

பாமக நிர்வாகிகள் சிலரை நீக்குவதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்து வரும் நிலையில், அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என அன்புமணி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பாமகவில் அன்புமணி - ராமதாஸ் இடையே முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ் தனது மகனான அன்புமணியை பலவாறாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று அன்புமணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொண்டார். ஆனால் அதில் அவர் ராமதாஸ் குறித்து மரியாதையுடனே பேசினார்.

 

இந்நிலையில் ராமதாஸ், பாமக கட்சியின் பொருளாளரும் அன்புமணி ஆதரவாளருமான திலகவதியை பொருளாளர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். மேலும் பாமக விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக இருந்து மயிலம் சிவக்குமாரை பொறுப்பில் இருந்து நீக்குவதாகவும், அவருக்கு பதிலாக புகழேந்தி அந்த பொறுப்பை வகிப்பார் என்றும் அறிவித்தார்.

 

இந்நிலையில் திலகவதி பாமக பொருளாளராக தொடர்வார் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அன்புமணி. மேலும் பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, பாமக நிர்வாகிகளை நீக்கவோ, மாற்றவோ கட்சித் தலைவரான எனக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது. வேறு யாரும் அதை செய்ய முடியாது என அவர் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

SIR பணியை தடுக்கும் மாநிலங்களில் காவல்துறையின் பொறுப்பை நீதிமன்றமே எடுத்து கொள்ளும்: சுப்ரீம் கோர்ட்

சோழர் காலத்து கோவிலில் திருமணம் செய்ய தடை.. அதிக விவாகரத்து காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments