Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் விடிய விடிய மழை: எந்தெந்த பகுதியில் வெளுத்து வாங்கியது?

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (07:58 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் சென்னையின் முக்கிய இடங்களில் மழை பெய்ய தொடங்கி ஒருசில இடங்களில் விடியவிடிய மழை பெயது.
 
குறிப்பாக தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, கிண்டி, திருவான்மியூர், மாம்பலம், கோயம்பேடு, மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த பகுதியில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல்  சைதாப்பேட்டை, வடபழனி, அசோக்நகர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், பெரம்பூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்
 
இன்றும் சென்னையின் சில பகுதியில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் இன்று வெளியே செல்லும் மக்கள் மழையை எதிர்கொள்ள ஆயத்தத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார். மேலும் அரபிக் கடல், மகாராஷ்டிரா கடல், மத்திய வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments