சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நேர்காணலில் இலவச திட்டங்கள் குறித்து விளாசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீடியோ வைரலாகி வருகிறது.
மாநில அரசுகள் தொடர்ந்து இலவசங்களை வழங்கி வருவதால் நாட்டின் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாக சில நாட்கள் முன்னதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் அதிகமான இலவச பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஆங்கில தொலைக்காட்சி விவாதத்தில் காணொலியில் பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் செய்தி தொகுப்பாளர் இலவசம் குறித்து பேசியபோது, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது இலவசமா என கேள்வி எழுப்பியதுடன், தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்ற மாநிலங்களின் வளர்ச்சி உள்ளிட்டவற்றை கம்பேர் செய்து பிடிஆர் பேசியிருந்தது வைரலாகியுள்ளது.
இதுகுறித்து பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் “இந்திய வரலாற்றில் உலகத்தின் சிறந்த ஆலோசகர்கள் அறிவுரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சர்வாதிகாரமாக சிலர் வழங்கும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம். அரசமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவை இல்லை” என்று கூறியுள்ளார்.