Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா உடல்நிலை குறித்து பொன்னையன் கூறியதாவது.....

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2016 (22:15 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22 ஆம் தேதி உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 
 
தொடர்ந்து அங்கே அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று இரவு அதிமுக செய்தித்தொடர்பாளரும், அதிமுகவின் மூத்த தலைவருமான பொன்னையன் முதல்வரின் உடல் நலம் விசாரிக்க அப்பல்லோ வந்தார். அப்போது அவர் கூறியதாவது,

”முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தனக்கான உணவை தானே உட்கொள்கிறார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வெடுத்துக்கொள்கிறார். அவர் விரைவில் மக்கள் பணியாற்ற மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் 5 கடற்கரையின் தூய்மை பணிகள்: தனியாருக்கு விட முடிவு..!

அடுத்த போப்பை தேர்வு செய்ய பணியை தொடங்குங்கள்: போப் பிரான்சிஸ்

எனக்கு நிறைய கொலை மிரட்டல் வருகிறது.. வருத்தத்துடன் கூறும் எலான் மஸ்க்..!

இயக்குனர் அமீர் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியது ஜாபர் சாதிக் தான்,, அமலாக்கத்துறை

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தவர் கைது.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments