Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமரின் வருகையொட்டி... மாபெரும் தூய்மை பணி- அண்ணாமலை

பிரதமரின் வருகையொட்டி... மாபெரும் தூய்மை பணி- அண்ணாமலை
, சனி, 30 டிசம்பர் 2023 (19:08 IST)
பிரதமர் நரேந்திரமோடி வரும் ஜனவரி 2 ஆம் தேதி அன்று தமிழகம் வருகிறார். இங்கு, 1200 கோடியில் கட்டப்பட்ட திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதன் ஒரு பகுதியாக திருச்சியை சுத்தம் செய்யும் பணி காலை 6  மணி முதல் 8 மணி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:

‘’வரும் ஜனவரி 2, 2024 அன்று, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் வருகையையொட்டி, தமிழ்நாடு பாஜக   சார்பாக, ஸ்வச் பாரத் - தூய்மை இந்தியா திட்டத்தினை எதிரொலிக்கும் வண்ணம் காலை 6 முதல் 8 மணி வரையில், திருச்சி மாநகரத்தையும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளையும் சுத்தம் செய்யும் மாபெரும் தூய்மை பணி, நடைபெறவிருக்கிறது.

இந்த பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தன்னார்வலர்களும், பொதுமக்களும், கீழ்க்காணும் இணைப்பில் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு - சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்