சூப்பர் 8க்கு தகுதி பெறாத நியூசிலாந்து.. உள்ளே புகுந்த வெஸ்ட் இண்டீஸ்! – பரபரப்பான கட்டத்தில் உலக கோப்பை டி20!

Prasanth Karthick
வெள்ளி, 14 ஜூன் 2024 (10:39 IST)
உலக கோப்பை டி20 போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.



உலக கோப்பை டி20 போட்டியின் லீக் சுற்றுகள் அமெரிக்காவில் பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில் 4 பிரிவுகளில் 20 நாட்டு அணிகள் மோதிக் கொள்கின்றன. எல்லா அணிகளும் கிட்டத்தட்ட 3 போட்டிகள் முடித்துவிட்ட நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் பிரிவுகள் வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சி பிரிவில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், உகாண்டா, பப்புவா நியூ கினியா, உள்ளிட்ட நாடுகள் விளையாடி வந்தன. இதில் ஆப்கானிஸ்தான் அணி 3க்கு 3 போட்டிகளையும் வென்று முதல் அணியாக அணி சி-யிலிருந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதை தொடர்ந்து நேற்று நடந்த லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்தை வீழ்த்தி சூப்பர் 8க்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணியோ இதுவரை போட்டியிட்ட 2 போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது. இனி வரும் போட்டிகளில் வென்றாலும் நியூசிலாந்து சூப்பர் 8க்கு செல்ல முடியாது என்பதால் மற்ற அணிகளுடன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

2019 உலக கோப்பையில் இறுதி போட்டியில் இங்கிலாந்துடன் மோதும் அளவு வலுவாக இருந்த நியூசிலாந்து அணி இப்படி மோசமான சரிவை சந்தித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments