மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

Siva
திங்கள், 2 ஜூன் 2025 (08:32 IST)
மதுரையில் முருக பக்தர் மாநாடு நடைபெற இருப்பதை அடுத்து, இந்த மாநாட்டிற்கு உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரையில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர் மாநாடு வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. "குன்றம் காக்க, கோவிலை காக்க" என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு வருகை தருமாறு, தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று இந்து முன்னணி தொண்டர்கள் சந்தித்து வருகின்றனர்.
 
மேலும் நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா முழுவதும் உள்ள மடாதிபதிகள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இந்த நிலையில், மாநாட்டின் சிறப்பு விருந்தினராக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்க இருப்பதாகவும், அவர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
 
மாநாடு தொடர்பான அழைப்புகளை பெற்றுக்கொண்டதாக யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து, அவர் இந்த மாநாட்டில் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

விதிமுறைகளை மீறி தவெக தொண்டர்கள் செய்த அட்டகாசம்.. விரட்டிப் பிடிக்கும் காவலர்கள்

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments