Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 5 மாத குழந்தை.. தாயே கொன்று நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (16:59 IST)
தகாத உறவுக்கு இடையூறாக இருந்த ஐந்து மாத குழந்தையை தாயே கொலை செய்து கணவர் கொலை செய்து விட்டதாக நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் வடலூரில் உள்ள ஒரு இளைஞருக்கும் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த ஐந்து மாத பச்சிளம் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்த ராஜேஸ்வரி கள்ளக்காதலருடன் இணைந்து கொலை செய்துவிட்டு குழந்தையின் பிணத்தை சாக்கடை கால்வாயில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல் வீட்டுக்கு வந்துள்ளார்,.

மேலும் குழந்தையை தனது கணவர் கடத்தியதாக நாடகமாடிய நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக ராஜேஸ்வரி பதில் கூறியதை அடுத்து அவரை தீர விசாரித்ததில் குழந்தையை கொலை செய்து சாக்கடையில் வீசியதாக ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments