Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலுவையில் இருக்கும் திருமண உதவித் திட்டம்… விரைவில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (09:40 IST)
மகளிருக்கான திருமண உதவித்திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள நிலையில் விரைவில் அந்த திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்கான திருமணத்துக்காக 8 கிராம் தங்கமும் 25000 ரூபாய் முதல் 50000 ரூபாய் பணமும் திருமண உதவித் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகள் இந்த திட்டத்தின் மூலம் பண உதவி யாருக்கும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என மகளிர் உரிமைகள் துறை அமைச்சா் கீதா ஜீவன் என நேற்று அறிவித்துள்ளார்.  அவர் பேசியபோது ‘கடந்த 3 ஆண்டுகளில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பான கருத்துகள் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க சொல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்