Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஞ்சிபுரத்தில் பொது இடத்தில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை – சொத்துத் தகராறு !

காஞ்சிபுரத்தில் பொது இடத்தில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை – சொத்துத் தகராறு !
, ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (08:14 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறில் இளைஞர் ஒருவரை கும்பல் ஒன்று பொது இடத்தில் வைத்து வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியைச்  சேர்ந்த முருகனின் 3ஆவது மகன் சதீஸ்குமார். டிப்ளமோ படித்துள்ள இவர் பழைய கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை  வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக இரு சக்கரவாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது காரில் வந்த அவரை  வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட வெட்டியுள்ளது. அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக  பேருந்தில் ஏறியுள்ளார். ஆனாலும் விடாத அந்த கும்பல் அவரைப் பேருந்தில் வைத்தே வெட்டியுள்ளது. இதைப்பார்த்து பயந்த பயணிகள் பயந்து ஓடியுள்ளனர். இதையடுத்து குற்றுயிராய் இருந்த அவரைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு அந்த பேருந்திலேயே கொண்டுசெல்ல, அவர் வழியிலேயே இறந்துள்ளார்.

இது சம்மந்தமாக போலிஸார் நடத்திய விசாரணையில் சதிஷ்குமாருக்கு சொத்து விஷயமாக பங்காளிக் குடும்பத்தோடு பிரச்சனை இருந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொலையான சதிஷ் மேலும் இரு கொலை முயற்சி வழக்குகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல்கலைக்கழகத்தில் பகவத் கீதை தேவையா? ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து