சொகுசு பேருந்தில் மோதிய லாரி; 3 பேர் பலி! – பொன்னேரி அருகே கோர விபத்து!

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (08:40 IST)
பொன்னேரி அருகே சொகுது பேருந்து, லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி அருகே தச்சூர் கூட்டுச்சாலை உள்ளது. அந்த வழியாக சென்றுக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்றும், சரக்கு லாரி ஒன்று எதிரெதிரே மோதிக்கொண்டதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. சொகுசு பேருந்தின் பக்கவாட்டில் மோதியதால் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கோர விபத்தால் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் சேதமடைந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். iந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments