Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பினராயி விஜயன், ராதிகா குணமாக கமல்ஹாசன் வாழ்த்து!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (07:13 IST)
கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அதேபோல் நடிகை ராதிகாவின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் 
 
இந்த நிலையில் பினராயி விஜயன் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் விரைவில் குணமாக வேண்டும் என கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 
 
கேரள முதல்வர் நண்பர் பினராயி விஜயன், சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழி ராதிகா சரத்குமார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். 4 நாட்கள் முன்புவரை தேர்தல் களத்தில் பரபரப்பாக இருந்தவர்கள். (முன்னெச்சரிக்கைகளையும் மீறித் தாக்குகிறது கொரோனா. இவர்கள் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்ப வாழ்த்துகிறேன். நோய்த்தாக்குதலுக்கு ஆட்படாதவர்கள் அலட்சியம் தவிர்க்க வேண்டும். ஆபத்தை உணரவேண்டும். நான்  உள்பட’ இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசு எடுக்கும் முடிவை பின்பற்றுவோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு..

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரி கிடையாதா?

இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லுமா?

நேற்றைய திடீர் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்தது பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை இலங்கைக்கு மாறியது ஏன்? இதுதான் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments