தேமுதிகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக கமல்ஹாசன் ஆலோசனை செய்து வருகிறார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்
பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிகாவுக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், இன்று அதிமுகவிலிருந்து அக்கட்சி விலகியது.
இந்நிலையில் 235 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்புகள் வெளியாகும் என அக்கட்சித் தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது தேமுதிகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக கமல்ஹாசன் ஆலோசனை செய்து வருகிறார்.
மேலும் தேமுதிகவை தங்கள் கூட்டணில் சேர்ப்பது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் சமக தலைவர் சரத்குமார் ஆலோசித்து வருகின்றனர்.
மேலும் நல்லவர்களையும் வல்லவர்களையும் நம்மவர் வரவேற்பார் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.