Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட இருட்டுக் கடை – மக்கள் வரவேற்பு கிடைக்குமா?

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (11:56 IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கிவந்த இருட்டுக் கடை 20 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊர் பெயரை சொல்லும் போதே அந்த ஊரின் சிறப்பான விஷயங்கள் பற்றிய நியாபகமும் சேர்ந்து வரும். அந்த வகையில் திருநெல்வேலிக்கு அடையாளமாக இருந்தது இருட்டுக் கடை அல்வா. நெல்லைக்கு சுற்றுலா செல்பவர்கள் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா வாங்காமல் திரும்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம்  முழுவதும் இருட்டுக்கடை அல்வா புகழ் பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் இருட்டுக்கடை அல்வா அதிபர் ஹரி ஹரிசிங் அவர்களுக்கு திடீரென கொரோனா உறுதியான தகவல்கள் வெளிவந்தது. 

இதையடுத்து மன அழுத்தம் தாங்காமல் அவர் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் அந்த கடை கடந்த 20 நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது ஹரிசிங்கின் பேரன் குருசிங் தலைமையில் இருட்டுக் கடை நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது. ஹரிசிங் இருந்த போது கிடைத்த வரவேற்பே அவரது பேரனுக்கும் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments