நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

Mahendran
செவ்வாய், 9 டிசம்பர் 2025 (15:17 IST)
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானத்தை 'இந்தியா' கூட்டணியின் தலைவர்கள் இன்று மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்தனர்.
 
மதுரை திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற கோரிய வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் அளித்த உத்தரவு சர்ச்சைக்குள்ளானது. மனுதாரரை சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற அவர் மீண்டும் உத்தரவிட்டதால், அது சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய தீர்ப்பு என்று தமிழக அரசு குற்றம் சாட்டியது.
 
இதன் விளைவாக, தி.மு.க., காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100 மக்களவை எம்.பி.க்கள் மற்றும் 50 மாநிலங்களவை எம்.பி.க்கள் கையெழுத்திட்ட தீர்மான நோட்டீஸை, கனிமொழி, டி.ஆர். பாலு, அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மக்களவை தலைவரிடம் வழங்கினர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments