இனிமேல் கனமழை தான்.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு..!

Mahendran
சனி, 7 ஜூன் 2025 (14:52 IST)
இந்த வாரம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
மேற்கு திசையில் காணப்படும் காற்றழுத்த மாற்றம் காரணமாக, ஜூன் 7 முதல் 9 வரை தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை இருக்கக்கூடும்.
 
ஜூன் 10ஆம் தேதி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், ஜூன் 11 அன்று தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் சில இடங்களில் கனமழை பெய்யலாம். ஜூன் 12ல் வேலூர், ராணிபேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை முன்னறிவிப்பு உள்ளது.
 
வெப்பநிலை சார்பாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் சாதாரணத்தை விட 2–3°C அதிகமாகப் பதிவாகலாம்.  
 
சென்னையில் வானம் மேகமூட்டமாக தோன்றும். சில பகுதிகளில் இடியுடன் லேசான அல்லது மிதமான மழை வீழக்கூடும்.
 
மீனவர்கள், ஜூன் 8 முதல் 11 வரை மன்னார் வளைகுடா பகுதியில் கடுமையான காற்று வீசக்கூடியதனால், அதுபோன்ற இடங்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments