வெயில் அவ்வளவுதான்.. நாளை முதல் சென்னையில் மீண்டும் மழை: தமிழ்நாடு வெதர்மேன்

Mahendran
திங்கள், 10 நவம்பர் 2025 (12:54 IST)
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 10 மற்றும் 11) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
 
கிழக்கு காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக, வட தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
தென் மற்றும் டெல்டா மாவட்டங்கள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று  பெய்ததை தொடர்ந்து, தென் மாவட்டங்களில் இன்றும் மழை நீடிக்கும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை கடற்கரை பகுதிகளில் நாளை முதல் மழை பெய்யும்.
 
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நவம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிக்கு பிறகு மழையின் தீவிரம் படிப்படியாக குறையும். எனினும், நவம்பர் 18, 19 தேதிகளில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் என்றும் பிரதீப் ஜான் தனது 'எக்ஸ்' சமூக வலைத்தள பதிவில் கணித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?

ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments