தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: சென்னை, புறநகர்வாசிகள் உஷார்!

Mahendran
வியாழன், 2 அக்டோபர் 2025 (14:58 IST)
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. 
 
வங்கக்கடலில் தற்போது வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு ஒடிசா மற்றும் ஆந்திரக் கடற்கரையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதன் தாக்கத்தால், தமிழகத்தில் பரவலாக மழை நீடிக்கும். குறிப்பாக, தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
அக்டோபர் 2ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மற்றும் புதுவை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், அக்டோபர் 3ஆம் தேதி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை நீடிக்கிறது. 
 
அக்டோபர் 4ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும், அக்டோபர் 5ஆம் தேதி மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் தமிழகப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 
 
வரும் நாட்களில் வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

விதிமுறைகளை மீறி தவெக தொண்டர்கள் செய்த அட்டகாசம்.. விரட்டிப் பிடிக்கும் காவலர்கள்

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments