சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

Siva
செவ்வாய், 2 டிசம்பர் 2025 (08:50 IST)
வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
நாள்: 01.12.2025நேரம்: இரவு 8 மணிபெருநகர சென்னை மாநகராட்சிவடகிழக்கு பருவமழை கால நடவடிக்கையின் விவரம்
 
மழையின் அளவு 17.10.2025 அன்று காலை 8.30 மணி முதல் இன்று (01.12.2025) காலை 8.30 மணி வரை சராசரியாக 369.70 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
 
01.12.2025 காலை 8.00 மணி முதல் இரவு 8 மணி வரை சராசரியாக 100.79 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
 
அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 168.70 மில்லிமீட்டர் மழையளவும் (வார்டு-3,திருவெற்றியூர் மண்டலம்), குறைந்தபட்சமாக மயிலாப்பூர் பகுதியில் 26.10 மில்லிமீட்டர் மழையளவும் (பெருங்குடி மண்டலம்) பெய்துள்ளது.
 
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 215 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உணவு, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
 
நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 111 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
 
22.10.2025 முதல் 30.11.2025 வரை மொத்தம் 5,98,200 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
 
30.11.2025 அன்று 32,500 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
 
01.12.2025 83,600 நபர்களுக்கு மதிய உணவு, 1,54,000 நபர்களுக்கு இரவு உணவு என மொத்தம் 2,37,600 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
 
பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், 17.10.2025 முதல் 30.11.2025 அன்று 2800 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்கள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 1,16,264 நபர்கள் பயனடைந்துள்ளனர். 01.12.2025 அன்று 63 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 1,918 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
 
தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 107 படகுகள் தயார்நிலையில் உள்ளது. இதில் 36 படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
299 தற்காலிக ஆழ்துளை கிணறுகள், 73 ஆழ்துளை கிணறுகள் மற்றும் 181 ஜெட்ராடிங் வாகனங்கள், 45 ஜெட்டிங் மற்றும் உறிஞ்சும் இயந்திரங்கள், 3 கழிவுநீர் உந்தி ஊட்டும் இயந்திரங்கள், 3 கழிவுநீர் அகற்றும் ரோபோட் இயந்திரங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 100 கழிவுநீர் உந்தி ஊட்டும் இயந்திரங்கள் என மொத்தம் 704 கழிவுநீர் அகற்றும் இயந்திரங்கள் கழிவுநீர் அகற்றும் பணிக்காக தயார்நிலையில் உள்ளன.
 
15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் 2,149 களப்பணியாளர்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணிகளை மேற்கொள்ள ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 111 சமையல் கூடங்கள் மற்றும் 215 நிவாரண மையங்களுக்கு தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
தேசிய பேரிடர் மீட்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 300 நபர்கள், மாநில பேரிடர் மீட்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 50 நபர்கள் தயார்நிலையில் உள்ளனர்.
 
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்ற வசதியாக 170 எண்ணெயில் இயங்கும் 100Hp மோட்டார் பம்புகள், 550 மின்சக்தியில் பொருத்தப்பட்ட பம்புகள் உள்ளிட்ட பல்வேறு திறன் கொண்ட 1498 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.
 
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் விழும் மரங்களை அகற்றுவதற்காக மாநகராட்சியின் மர அறுவை இயந்திரங்கள் 15, ஹைடிராஜனிக் ராணி 2, கைக்கடவை மர அறுவை இயந்திரம் 224, லோகோடிக் மர அறுவை இயந்திரங்கள் 216 என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன.
 
29.11.2025 முதல் 01.12.2025 இன்று வரை மழையின் காரணமாக விழுந்த 20 மரங்களும் அகற்றப்பட்டுள்ளது.
 
சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேக்கத்தின்றி போக்குவரத்திற்கு சீராக உள்ளது.
 
புறநகர்ப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், வாண்டல் மண் சேகரிப்பதன் தொட்டிகள் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
24 மணி நேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாட்டு மையங்களில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றும் 150 ஆணையாளர்களுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் புகார்களை உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கண்காணிப்புப் படைகளுடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டுப் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
புயல் மற்றும் மழையின் போது முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கும் வகையில் ஆவின் பால் பவுடர்கள் 1 இலட்சம் பாக்கெட்டுகளும், குக்கீஸ், சிறிய டப்பாக்கள் 1 இலட்சம் மற்றும் மினி பிஸ்கட்டுகள் அடங்கிய சிறிய டப்பாக்கள் 1 இலட்சம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments