Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

120 கிமீ வேகம்... வர்தா புயலுக்கு இணையாக மாறுகிறது கஜா புயல்

120 கிமீ வேகம்... வர்தா புயலுக்கு இணையாக மாறுகிறது கஜா புயல்
, வியாழன், 15 நவம்பர் 2018 (18:50 IST)
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் திசைமாரிய காரணத்தால் கடலூர் மற்றும் பாம்பன் பாலம் இடையே இன்று இரவு 8 முதல் 11 மணிக்குள் கரையை கடக்க இருக்கிறது. இந்நிலையில் புயலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பதிவை ஒன்றி வெளியிட்டுள்ளார். 
 
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளது பின்வருமாறு, கஜா புயல் கரையை கடக்கும் போது வலுவிழக்கும் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கஜா புயல் தீவிரமடைந்து வருகிறது. 
 
கடலூர், வேதாரண்யம் இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் போது மணிக்கு 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். தற்போது தீவிரமடைந்து வரும் கஜா புயல் வர்தா புயலுக்கு இணையாக மாறுகிறது. 
 
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்கள் கஜா புயலால் மிகுந்த விழிப்புடன், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 
 
கஜா புயல் எதிர்பார்க்கப்பட்டது போல் பலவீனமடையாது. மாறாக, மிகுந்த தீவிரத்தோடு கரை கடக்கும். புயல் கரையை கடந்த பின்னரும் மழைக்கான வாய்ப்புகள் உள்ளது என பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’டாடி மம்மி வீட்டில் இல்ல’ : விஜய் பாடலைச் சொல்லி அமைச்சர் சாடல் !