Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்ச்சலுக்கு கண்டனம் தெரிவித்த அதிமுகவினர்: கல்நெஞ்ச காய்ச்சலே உனக்கு இரக்கம் இல்லையா?

காய்ச்சலுக்கு கண்டனம் தெரிவித்த அதிமுகவினர்: கல்நெஞ்ச காய்ச்சலே உனக்கு இரக்கம் இல்லையா?

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (12:35 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


 
 
முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார் என்ற தகவலையும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அதிமுகவினர் மருத்துவமனையில் குவிந்தனர்.
 
இதனையடுத்து மேலிட உத்தரவையடுத்து அவர்கள் வீட்டிற்கு சென்றனர். பொதுவாக விதவிதமாக போஸ்டர், பேனர் வைத்து தலைமையின் கவனத்தை ஈர்க்க தொண்டர்கள் செயல்படுவது உண்டு.
 
அது போல ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்த எண்ணிய ஒருவர் அவருக்கு வித்தியாசமாக ஒரு போஸ்டர் அடித்துள்ளார். அதில் அவர் காய்ச்சலுக்கே கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
கல்நெஞ்ச காய்ச்சலே எங்கள் தெய்வம் அம்மாவை சீண்டாதே! சீண்டதே!! என கூறப்பட்டுள்ளது அந்த போஸ்டரில். இது சமூக வலைதளங்களில் கலாய்க்கப்பட்டு வருகிறது. உலகத்துலயே காய்ச்சலுக்கு கண்டனம் தெரிவிச்சது நம்மாளுங்க தான்னு பேசிக்கிறாங்க.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. அரியலூர் அரசு பள்ளி ஆசிரியர் கைது..!

கோடிக்கணக்கில் கிரிப்டோ கரன்சியில் மோசடி.. தமன்னா, காஜல் அகர்வாலிடம் விசாரணையா?

நாளை விசாரணைக்கு வர முடியாது.. முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள்: சீமான்

கழுத்தை அறுத்தாலும் பாஜகவில் இணைய மாட்டேன்: மம்தா பானர்ஜி உறவினர் பேட்டி..!

திமுக அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் புறக்கணிப்பு.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments