Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை 28க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு - தந்தை தற்கொலை

Webdunia
சனி, 18 ஜூன் 2016 (17:20 IST)
17 வயது சிறுமியை 28க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தந்தை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 

 
சிவகங்கை ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமியை பல ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து தந்தை, அண்ணன், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்டக்டர், அண்ணனின் நண்பர்கள் என பலரும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
 
இதில், மருத்துவர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும், காவல்துறை உதவி ஆய்வாளர், காவல்துறை ஆய்வாளர், ஏ.டி.ஜி.பி. ஆகியோரும் தன்னை பாலியல் கொடுமைப்படுத்தியதாக விசாரணைக் குழுவிடம் அந்த சிறுமி தெரிவித்திருந்தார்.
 
இந்த விவகாரத்தில் இதுவரை சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி, அண்ணன் கார்த்திக் ஆகியோரையும் சேர்த்து 8 பேர் கைதாகி இருந்தனர். முக்கிய அதிகாரிகள் பலரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
 
கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சிறுமியின் தந்தை, சகோதரன் கைது செய்யப்பட்டனர். ஜூன் 17ஆம் தேதி சிறுமியின் வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்தார். ஆனால், வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
 
இவ்வழக்கில் காவல்துறை உயர் அதிகாரி உள்ளிட்ட 26 பேர் உள்ளதாக சிறுமியின் வாக்குமூலத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து 2–வது முறையாக பாதிக்கப்பட்ட சிறுமி மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்கு மூலம் அளித்தார்.
 
இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவகங்கையில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் 220 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் சிவகங்கையில் சிபிசிஐடி போலீசாரால் விசாரனை நடத்தப்பட்டு வந்த சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. அரியலூர் அரசு பள்ளி ஆசிரியர் கைது..!

கோடிக்கணக்கில் கிரிப்டோ கரன்சியில் மோசடி.. தமன்னா, காஜல் அகர்வாலிடம் விசாரணையா?

நாளை விசாரணைக்கு வர முடியாது.. முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள்: சீமான்

கழுத்தை அறுத்தாலும் பாஜகவில் இணைய மாட்டேன்: மம்தா பானர்ஜி உறவினர் பேட்டி..!

திமுக அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் புறக்கணிப்பு.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்