பட்டாசு குடோனை ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகள்.. திடீரென வெடித்ததால் தாசில்தார் படுகாயம்..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (15:03 IST)
பட்டாசு குடோனை அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றபோது திடீரென பட்டாசுகள் வெடித்ததால் தாசில்தார் உள்பட அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே  பட்டாசு ஆலை ஒன்றை ஆய்வு செய்ய அதிகாரிகள் இன்று சென்றனர். அவர்கள் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது திடீரென பட்டாசுகள் வெடித்தது.
 
இதனை அடுத்து மூன்று அதிகாரிகள் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். நிலவரித் திட்ட டி.ஆர்.ஓ மற்றும் தாசில்தார், தேன்கனிக்கோட்டை தாசில்தார், குடோன் மேனேஜர் படுகாயம்  ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
பட்டாசு ஆய்வின் போது திடீரென பட்டாசுகள் வெடித்து அதிகாரிகள் காயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

அடுத்த கட்டுரையில்
Show comments